Enable Javscript for better performance
முதல்வர் குறித்து முகநூலில் வதந்தி: தூத்துக்குடி கிறிஸ்தவ மதபோதகர் கைது- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் குறித்து முகநூலில் வதந்தி: தூத்துக்குடி கிறிஸ்தவ மதபோதகர் கைது

    By DIN  |   Published on : 15th October 2016 07:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை,

    தமிழக முதல்வர் குறித்து முகநூலில் வதந்தி பரப்பியதாக, தூத்துக்குடி கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

     தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாததால்,ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 22-ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஜெயலலிதா உடல்நலம் குறித்து தவறான வதந்திகள் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), முகநூல் (ஃபேஸ்புக்), சுட்டுரை (ட்விட்டர்), யூ-டியூப் ஆகியவற்றில் பரவுகிறது.

    இதையடுத்து வதந்தியை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு போலீஸôர், முதல்வர் குறித்த அவதூறான தகவல்களை முகநூலில் பதிவு செய்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி மீது இரு வாரங்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை பெருநகர காவல்துறைக்கு சுமார் 60 புகார்கள் வந்தன.

     இந்த புகார்களின் அடிப்படையில் முதல் கட்டமாக 43 வழக்குகளை போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். முகநூல் மூலம் வதந்தியை பரப்பியதாக இந்த வாரத்தில் சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸôர் 4 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக 9 வழக்குகளை புதிதாக போலீஸôர் பதிவு செய்தனர்.

    கிறிஸ்தவ மதபோதகர் கைது:

      இதற்கிடையே அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி, புரசைவாக்கம் டாக்டர் ழகப்பா சாலைப் பகுதியைச் சேர்ந்த சீ.சந்துரு,சென்னை சைபர் குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், முகநூலில் ஜேசுராஜ் என்ற பக்கத்தில் முதல்வர் உடல்நலம் குறித்து வதந்தி பரப்பும் வகையில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில் போலீஸôர் விசாரணை செய்தார். போலீஸôர் விசாரணையில் முகநூலில் உள்ள அந்த பக்கத்துக்குரியவர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கணபதிநகரைச் சேர்ந்த ஆ.ஆண்டனி ஜேசுராஜ் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர், அந்த மாவட்டத்தில் உள்ள மணப்பாட்டில் இருக்கும் பாதிரியார் பயிற்சி கல்லூரியில் தங்கியிருந்து பாதிரியார்குரிய படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது. ஏற்கனவே ஜேசுராஜ், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பும் படித்திருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸôர், மணப்பாடு சென்று  ஜேசுராஜை பிடித்து விசாரித்தனர். போலீஸôர் விசாரணையில் ஜேசுராஜ்,தான் முகநூலில் முதல்வர் குறித்து வதந்தியை பரப்பியதை ஒப்புக் கொண்டாராம். இதையடுத்து போலீஸôர், அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

     எழும்பூர் நீதிமன்றத்தில் ஜேசுராஜ், சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இப் பிரச்னையில் மேலும் சிலரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை சைபர் குற்றப்பிரிவு போலீஸôர் எடுத்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai