Enable Javscript for better performance
ராமேசுவரம் மீனவர்கள் 9 நாட்களுக்கு பின்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் மீனவர்கள் 9 நாட்களுக்கு பின்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    By DIN  |   Published on : 15th October 2016 05:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம்,

    ராமேசுவரம் மீனவர்கள் ஈடுபட்டு வந்த  காலைவரையற்ற வேலைநிறுத்தத்ததை வாபஸ் பெற்றதையொட்டி 9 நாட்களுக்கு பின்பு  545 விசைப்படகுகளில் சனிக்கிழமை காலையில்  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு  சென்றனர்.

    இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரையும், இலங்கை கடற்படை வசமுள்ள ராமேசுவரம் உள்பட தமிழகம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் 115 படகுகளை விடுவிக்க கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல்  காலைவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.தொடர்ந்து அக்டோபர் 13 ஆம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மீனவர்கள், வாழ்வாதரம் கருதி காலைவரையற்ற வேலைநிறுத்தத்தை வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனர்.அதன் பின்னர் மீன்பிடிக்க தேவையான மீன்பிடி வலைகளையும்,மீன்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஐஸ் கட்டிகளையும், டீசல் உள்பட மீனபிடி சாதனங்களை சேகரித்துக்கொண்டு மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி சீட்டை மீன்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு 545 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை காலையில் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.         

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai