Enable Javscript for better performance
வங்கதேசத்துக்கு சீனா ரூ.1.3 லட்சம் கோடி கடனுதவி- Dinamani

சுடச்சுட

    
    jpg

    டாக்கா, 

    சீன அதிபரின் வங்கதேச பயணத்தின்போது அந்நாட்டுக்கு ரூ. 1.34 லட்சம் கோடி மதிப்பிலான கடனுதவி வழங்குவது குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    மேலும் ரூ. 91,100 கோடி மதிப்பிலான தொழில் உடன்படிக்கைகள் கையெழுத்தாகின என்று வங்கதேச வெளியுறவுத் துறைச் செயலர் முகமது ஷாஹிதுல் ஹக் சனிக்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

    மின்சாரம், சாலைகள் மேம்பாடு, ரயில் ஆகிய துறைகளில் சீனாவின் அதி நவீன தொழில்நுட்பங்களை வங்கதேசத்துக்கு அளிக்க உடன்படிக்கை ஏற்பட்டது. இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே 27 ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. வங்கதேசத்துக்கு 2000 கோடி டாலர் (சுமார் ரூ. 1.34 லட்சம் கோடி) மதிப்பிலான கடனுதவி வழங்குவது

    தொடர்பாக உடன்படிக்கை கையெழுத்தானது. இரு தலைவர்களும் இணைந்து 6 திட்டங்களை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர். இவற்றைத் தவிர இரு நாட்டு தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு தொடர்பாக 13 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றின் மதிப்பு 1360 கோடி டாலர் (சுமார் ரூ.91,100 கோடி).

    வங்கதேசம் - சீனா இடையே அரசு மற்றும் தனியார் துறையினர் ஏற்படுத்திய அனைத்து உடன்படிக்கைகளின் மதிப்பு விவரம் அடுத்த சில நாட்களில் தெரிய வரும் என்றார்.

    சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம் ஏற்படுத்துவதால் இந்தியாவுக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக கருதக் கூடாது என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா குறிப்பிட்டார்.

    வங்கதேசத்துக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் வரும் முதல் சீன அதிபர் ஜீ ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்காவுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சனிக்கிழமை சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜீ ஜின்பிங், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சென்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai