Enable Javscript for better performance
வரதட்சனை கொடுமை: பெண் தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை,

    வரதட்சனை கொடுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்து போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     மதுரை பசும்பொன்நகர் சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் புவனேஸ்வரி(29). இவருக்கும் வள்ளுவர் காலனியைச் சேர்ந்த கனகா ஆனந்த் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில் கனகா ஆனந்த் கூடுதல் வரதட்சனை கேட்டு புவனேஸ்வரியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

     இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முனியசாமியின் வீட்டிற்கு வந்த கனகா ஆனந்த் சமரசம் பேசி புவனேஸ்வரியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு முனியசாமியை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட கனகா ஆனந்த், புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவித்து உள்ளார்.

     இதுகுறித்து முனியசாமி அளித்த புகாரின் பேரில் கனகா ஆனந்த் மீது கூடல்புதூர் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai