Enable Javscript for better performance
15-ஆவது பேரவையின் முதல் கூட்டத் தொடர் முடித்துவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை,

    சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைத்து, ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

     இதுதொடர்பாக சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய அரசமைப்புப் பிரிவு 174 (2)-ன் கீழ், 15-ஆவது சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து வைத்துள்ளார்' என தெரிவித்துள்ளார்.

      15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே 25-இல் தொடங்கியது. அன்றைய தினம் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். 

    ஜூன் 3-இல் சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலும், 17-இல் ஆளுநர் உரையாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்பின்னர், உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் ஜூன் 23-ஆம் தேதி வரை நடந்தது.

     இதைத் தொடர்ந்து, ஜூலை 21-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்பட்டன. சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 16-இல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

     இந்த நிலையில், 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் முடித்து வைத்துள்ளார். பேரவைக் கூட்டம்: சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரையோ அல்லது அவசர அவசியத்துக்காக பேரவையைக் கூட்ட வேண்டுமென்றால், அதற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai