

சென்னை: மத்திய பாஜக அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் விருந்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மேலும் கூறியதாவது: - 3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மை காரணமாக பாஜக அதிகார போக்குடன் செயல்படுகிறது. மேலும் 3 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் பாஜக செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.