

மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது: - ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் ஆளும் பா.ஜ.க வுக்கு சாதகமாக இருக்கும்.
தேர்தலை வைத்து யாரும் பா.ஜ.க வை யாரும் மிரட்ட முடியாது. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த வாக்குகளில் 54 சதவீதம் ஆதரவாக உள்ளன. மேலும் சில கட்சிகள் பா.ஜ.கவுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளன.
எனினும் எந்தெந்த கட்சிசிகள் பா.ஜ.கவுக்கு ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவிக்கவில்லை.
கடந்த 2012ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற போது பிரணாப் முகர்ஜி 7,13,763 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ. சங்மா 3,15,987 வாக்குகள் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.