புதுதில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் மற்றும் சுகேஷிடம் குரல் மாதிரிகளை பதிவு செய்து சோதனை செய்ய தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, சுகேஷ் மற்றும் தினகரன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அமலாக்கத்துறை வசம் உள்ளது. இதனை சோதனை செய்யக் கோரி தில்லி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து இதன் உண்மைத் தன்மையை அறிய இருவரின் குரல் மாதிரிகளை சோதனை செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.