

புவனேஸ்வர்: வரும் 2019ம் ஆண்டில் ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டு மொத்தம் உள்ள 147 இடங்களில் 120 இடங்களை வெல்லும் என்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று கூறியுள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் விதமாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா 110 நாள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று அவர் ஒடிசா சென்றார்.
கட்சி தொண்டர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களை சந்தித்த அவர் வரும் 2019ம் ஆண்டில் ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டு மொத்தம் உள்ள 147 இடங்களில் 120 இடங்களை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் ஒடிசாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு 4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்த போதிலும் பிஜு ஜனதா தளம் அரசு ஒத்துழைக்காததால், பல வளர்ச்சித் திட்டங்கள் நிறைற்ற முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது என்றும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.