

பழைய ஓய்வூதிய திட்டத்தினை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ - ஜியோவின் ஒரு பிரிவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகர் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை தங்களது ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. அதில் குறிப்பாக மருத்துவம், கல்வி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் பணிபுரிவோர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது குறிப்பிட்டார்.
இதை மேற்கோள்காட்டி தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் அரசு ஊழியர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.