

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை வருகிற 12-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
காவிரி நதிநீர் நீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்தது.
இதையடுத்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன. அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவ ராய் மற்றும் ஏஎம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த மார்ச் 21ம் தேதி காவிரி குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தீபக் மிஸ்ரா கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நீதிமன்ற கோடைக்கால விடுமுறையை அடுத்து ஜூலை 11- ம் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறும் என்றும், இதில் ஒவ்வொரு தரப்பும் வாதத்தை முன்வைக்க ஏதுவாக கால அவகாசம் அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி தமிழக அரசு தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க செவ்வாய்க்கிழமை மேலும் ஒரு மணி நேரம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசின் வாதத்திற்கு பிறகு புதுச்சேரி அரசு தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க உள்ளது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாணையை 12- தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.