கைதாகிறார் செந்தில் பாலாஜி?: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குடகு விரைவு
செந்தில் பாலாஜி 2015-ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி


சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவும் டிடிவி தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜியை பண மோசடி வழக்கில் கைது செய்து விசாரணை செய்வதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குடகு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜி 2015-ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.25 கோடியை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செந்தில் பாலாஜியிடம் விசாரிப்பதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குடகு விரைந்துள்ளனர்.
தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜியை குடகில் வைத்து கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனால் தினகரன் ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி குடகு பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...