பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி
By DIN | Published On : 02nd April 2017 11:22 AM | Last Updated : 02nd April 2017 11:35 AM | அ+அ அ- |

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முஹம்மது அலி குஜ்ஜார் தர்காவில் நேற்று பின்னிரவு நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட 20 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். '
அந்த தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர் அங்குள்ள பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து கொடுத்து கொடூரமான முறையில் தாக்கி கொன்றுள்ளார். அவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இந்த கோரச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்யுள்ள போலீசார் மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்த தர்காவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? என்பது தொடர்பாக பரம்பரை வாரிசுகளுக்கு இடையில் சமீபகாலமாக போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.