
உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கில் காவிரியிலிருந்து ஜூலை 11-ம் தேதி வரை நாள் தோறும் தமிழகத்திற்கு 2000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காவிரி நீர் தொடர்பான விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேலும், “காவிரியில் இருந்து நீர் திறக்க அணைகளில் நீர் இல்லை. எங்கள் மாநிலத்திற்கே போதிய தண்ணீர் இல்லை” என்று அவர் கூறினார்.