முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கான நடிகர் : டி.ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கான நடிகர் என்று நிதியமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கான நடிகர் : டி.ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கான நடிகர் என்று நிதியமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசியது: அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் போன்றோர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வந்த காட்சியைப் பார்த்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் வந்தபோதும் பார்த்திருக்கிறோம்.

எல்லோரும் சாதாரணமாக நிதி நிலை அறிக்கையை எடுத்து வந்து வாசித்துள்ளனர் என்று கூறி ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கையை எடுத்து வந்த முறையைக் குறிப்பிட்டார்.  அப்போது நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டுக் கூறியது:

ஓபிஎஸ் நடிப்பில் சிவாஜிகணேசனையே மிஞ்சிவிடுவார். ஓபிஎஸ் அளவுக்கு நாங்கள் ஆஸ்கார் விருது வாங்கும் நடிகர் இல்லை என்றார்.  இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவையில் அமைதியாக அமர்ந்திருந்தார். அதே நேரம், அவரின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் எழுந்து அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரினர். ஆனால், அதனை பேரவைத் தலைவர் தனபால் ஏற்கவில்லை. 

திமுக உறுப்பினர்கள் சிலர் எழுந்து அமைச்சர் பேசியது தவறு எனக் குறிப்பிட்டனர். அதற்கு டி.ஜெயக்குமார் இதுதான் திமுக, ஓபிஎஸ் கூட்டணி என்பதுபோல சைகை காட்டினார். அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்து விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com