பா.ஜ.க,வின் முக்கிய கொள்கையே தேசத்திற்கு சேவை: அருண்ஜெட்லி 

பா.ஜ.க,வின் முக்கிய கொள்கையே தேசத்திற்கு சேவை: அருண்ஜெட்லி 

பணமதிப்பிழப்பு நடவடிகை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது குறைந்துள்ளது. இதன் மூலம் போலி நிறுவனங்கள் எளிதாக கண்டறிந்து அவை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டன என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ரொக்கமில்லா பொருளாதாரம் நோக்கி செல்கிறோம். இந்த நடவடிக்கை ஊழல் செய்வதை கடினமாக்கியுள்ளது.

மேலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தற்போது அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அதிகரிக்க, செல்லாத ரூபாய் நோட்டு கொண்டு வரப்பட்டது. பணமதிப்பிழப்பு என்பது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய நடவடிக்கையாக இருந்தது என்றும் கூறினார்.  மேலும்  கடந்த 10 வருட காங்கிரஸ் ஆட்சியில் கொள்கை முடக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. 

காங்கிரசின் முக்கிய கொள்கையே குடும்பத்திற்கு சேவை. பா.ஜ.க,வின் முக்கிய கொள்கையே தேசத்திற்கு சேவை ஆகும் என்றும் அருண்ஜெட்லி கூறியுள்ளார். கருணாநிதி -மோடி சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது மரியாதை நிமித்தமானது என்று கூறினார். கமல் செயலி தொடங்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் அரசியலுக்கு மேலும் ஒருவர் வருவது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com