அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும், எனக்கு தெரியாது: ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்றுள்ளனர்.
அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும், எனக்கு தெரியாது: ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்றுள்ளனர்.

இரு பெரும் நடிகர்களான நடிகர் கமல் மற்றும் ரஜினி ஆகியோர்  சினிமாவின் நடிப்பு ஆசானான சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழாவில் கலந்துக்கொண்டுள்ளனர்.

விழாவிற்கு வந்த நடிகர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கை குலுக்கி வரவேற்றார், மேலும் அமைச்சர் ஜெயகுமார் இரு நடிகர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் பேசிய கமல் மாநில, தேசிய, ஆசிய எல்லைகள் கடந்தவர் நடிகர் சிவாஜி கணேசன்; நடிகராகி இருக்காவிடில் விழாவுக்கு ரசிகனாக வந்திருப்பேன். யார் தடுத்தாலும் இந்த விழாவிற்கு வந்திருப்பேன் எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி என்ற கலைஞனுக்கு மரியாதை செய்தே ஆக வேண்டும் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் நடை, உடை பாவனையில் புரட்சியை உண்டாக்கியவர் சிவாஜி, சுதந்திர போராட்ட வீரர்களை கண்முன் நிறுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடை, உடை பாவனையில் புரட்சியை உண்டாக்கியவர் சிவாஜி.

சிவாஜி மணிமண்டபத்தை திறந்து வைக்கும் பெருமை ஓபிஎஸ்க்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அரசியலில் வெற்றி பெற சினிமா செல்வாக்கு மட்டும் போதாது. கமலுக்கு அரசியல் தெரிகிறது, எனக்கு தெரியவில்லை.

இரு மாதங்களுக்கு முன்னால் கேட்டால் அந்த ரகசியம் சொல்லியிருப்பார். அரசியலில் சிவாஜியின் தோல்வி அவரது தொகுதி மக்களுக்கான தோல்வி. அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும், எனக்கு தெரியாது என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com