Enable Javscript for better performance
கோலி சதம் வீண்: 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    கோலி சதம் வீண்: 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

    By DIN  |   Published on : 22nd October 2017 10:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    New-Zealand

    மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து இடையிலேயான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

    முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது. 

    இதனையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கப்தில், கொலின் முன்றோ களமிறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 48 ரன்னாக இருக்கும்போது கொலின் முன்றோ 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 6 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    நியூசிலாந்து 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்திருந்த நிலையில், ராஸ் டெய்லருடன் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஜோடி சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 

    45 ஓவர் முடிவில் 251 ரன்களை எடுத்த நியூசிலாந்து அணி, 46-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அடுத்த ஓவரை புவனேஸ்வர் குமார் வீசிய 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து டாம் லாதம் சதம் அடித்தார்.

    அணியின் வெற்றிக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் 49-வது ஓவரின் 5-வது பந்தில் டெய்லர் 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு நிக்கோல்ஸ் களமிறங்கினார். இவர் 49-வது கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 284 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது. 

    நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர் 95 எடுத்து ஆட்டம் இழந்தார். டாம் லதாம் 103 ரன்கள் எடுத்தார். 

    இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 121, தினேஷ் கார்த்திக் 35, ஜாதவ் 12, தோனி 25, பாண்டியா 16 ரன்களை எடுத்தனர். 

    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் 25-ஆம் தேதி நடக்கிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai