சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.