சென்னை: இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை ஐந்து முறை அலங்கரித்தவரும், திமுக தலைவருமான கலைஞர் இன்று மாலை சுமார் 6.10 மணி அளவில் காலமானார்.
இதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை வர உள்ளது என தெரியவந்துள்ளது.