சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.
இதனிடையே கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், பூமியை விட்டு நீங்கள் சென்றிருக்கலாம். ஆனால், தமிழ் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு என்றும் நிலைத்திருக்கும் என பதிவிட்டுள்ளார்.