சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேபோல, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சேவும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.