கருணாநிதி மறைவு: தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என
கருணாநிதி மறைவு: தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
Published on
Updated on
1 min read

    
புதுதில்லி: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மூச்சுக்குழாய் மாற்றுவதற்காகக் கடந்த மாதம் 18-ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்குச் சென்றார். அதன்பின் கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவு ரத்த அழுத்தக் குறைபாட்டால், காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

அதன்பின் இன்றுடன் 11 நாட்களாக தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தநிலையில் வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயல்பாட்டுக் குறைவு காரணமாக இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனை அடுத்து, குடியரசுத்தலைவர், பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து கண்ணீர் சிந்திய வந்தனர்.

இந்நிலையில், கருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையொட்டி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தலைநகர் தில்லியில் நாளை அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்படும்.

மேலும், நாளை மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி, கர்நாடகாவில் அரசு சார்பாக ஒரு நாள் துக்கம் அனுசரிகப்படும் என அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.