கொல்கத்தா: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து மேற்குவங்க முதல்வர் மம்தா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்இ கருணாநிதியை இழந்து தவிக்கும் தமிழக மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடுஇ நாட்டின் மிகப்பெரிய மகனை இழந்துவிட்டதாக மம்தா புகழாரம் சூட்டியுள்ளார்.