நிர்வாகத்திறன் நிறைந்தவர் கருணாநிதி: அஜித் புகழாஞ்சலி

நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர் திமுக தலைவர் கருணாநிதி என்று நடிகர் அஜித் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
நிர்வாகத்திறன் நிறைந்தவர் கருணாநிதி: அஜித் புகழாஞ்சலி
Published on
Updated on
1 min read


சென்னை: நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர் திமுக தலைவர் கருணாநிதி என்று நடிகர் அஜித் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி(95) உடல் நலக் குறைவு காரணமாக இன்று சிகிச்சை பலனின்றி மாலை 6.10 மணியளவில் காலமானார். 

கருணாநிதியின் மறைவு குறித்து நடிகர் அஜித் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.