புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யவதற்கான தடையை வரும் அக்டோபர் 8-ஆம் தேதி தடை நீட்டித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2007-இல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில், ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதியுதவி பெறுவதற்காக, வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதே வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யவதற்கான தடையை வரும் அக்டோபர் 8-ஆம் தேதி தடை நீட்டித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.