புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் பேருந்துகள், ஆட்டோ, வேன்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிராக போக்குவரத்து வாகனங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 7) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படாததால், பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பாதிப்பு; பள்ளிகளின் அருகே வசிக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவாய்ப்புள்ளதால், தங்களின் குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து வருமாறு ஒருசில பள்ளிகள் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.