முதல்வரானால் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா அமைப்பது: கமல்ஹாசன் பேச்சு

காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர் என்று திருச்சி
முதல்வரானால் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா அமைப்பது: கமல்ஹாசன் பேச்சு

திருச்சி: காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர் என்று திருச்சி பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசினார். 

மேலும் அவர் கூறும் போது யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள், காசு வாங்கி கொண்டு ஓட்டு போடாதீர்கள் ஊழல் ஒழிப்பே எங்களது முதல் பணி,  முதல்வரானால் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா அமைப்பது என்று கூறினார். 

மத்திய அரசு செய்வது தவறு, இதற்கு மேல் பேசுவது அவமரியாதை, அதை நாங்கள் செய்ய மாட்டோம் என்று கமல் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும், எத்தனை கலவரம் தூண்டினாலும் திசை திரும்ப மாட்டோம் என்றும் ஸ்கீம் என்பதை என்னவென்று கேட்டு காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார். 

'கர்நாடகாவிடம் இருந்து பெற வேண்டிய நீரை பெற்றே ஆக வேண்டும்.மற்ற மாநிலங்களிடம் இருந்து பெற வேண்டிய நீரை பேச்சுவார்த்தை, தீர்வு காண்பது கடமை.தமிழகத்தில் பெய்யும் மழையை வீணாகாமல் சிறு சிறு அணைகளை கட்டுவோம், ஏரி தூர்வாருவோம்.சொட்டு நீர்பாசனம் போன்ற நவீன நீர்ப்பாசனத்தை செயல்படுத்த வேண்டும்.'' என்றார்.

மேலும் ''நில நல மருத்துவர்களை நியமிப்போம். பயிற்சி அளிக்கப்பட்ட நில ஆய்வாளர்கள் நியமனம் செய்வோம். காய்கறி, பழ வகைகளுக்கு உள்ளூர் அடையாளம் தர ஏற்பாடு. விஷக் கலப்பில்லாத உரங்களை உற்பத்தி செய்வோம்.'' என்றார். மேலும் ''விவசாயிகளை சிறு தொழில் அதிபர்களை போல உருவாக்குவோம். 

தமிழகத்தில் 55% பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய உடற்பயிற்சி, விளையாட்டு இல்லாமல் 30% பெண்கள் உடல் எடையால் அவதிபடுகின்றனர்.பெண்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்வோம். ஆண்களுக்கு டாஸ்மாக் பிரச்சனை இருக்கிறது. பெண்களுக்கு சத்து மாத்திரைகள் தரப்படும்.'' என்றார். 

மேலும் ''ஆசிரியர்கள் நேர்மையாக இருந்தால்தான் கல்வி நேர்மையாக இருக்கும். லஞ்சம் கொடுத்தால் பணி கிடைக்கும் நிலையில் ஆசிரியர்கள். பல கோடி பணம் கொடுத்து துணைவேந்தர் பதவியில் அமர்வோர் தேசத்துரோகிகள். துணைவேந்தர்களின் வியாபாரத்தை முடக்க பாடுபடுவோம்'' என நிறைய கொள்கைகள், திட்டங்கள் குறித்து பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com