புதுவையில் வாகனங்களுக்கு வரி உயா்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு இன்று முதல் வரி உயா்த்தப்பட்டுள்ளது.
புதுவையில் வாகனங்களுக்கு வரி உயா்வு இன்று முதல் அமலுக்கு வந்தது


புதுச்சேரி: போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு இன்று முதல் வரி உயா்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத சில வகையான வாகனங்களுக்கான வரி விகிதத்தை இன்று முதல் உயா்த்தியுள்ளது. இதன்படி, சுமையுடன் கூடிய 3000 கிலோ எடைக்கு குறைவாக உள்ள வாகனங்களுக்கு தற்போது உள்ள ஆண்டு வரி ரூ. 2 ஆயிரம் நீக்கப்பட்டு, அந்த வாகனங்களின் விலையில் 6 சதவீதம் ஆண்டு வரியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இசைவாணையில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு தற்போது உள்ள காலாண்டுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.1000லிருந்து ரூ. 1200 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. உறங்கும் வசதி கொண்ட இருக்கை உள்ள வாகனங்களுக்கும் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காலாண்டுக்கு உறங்கும் வசதிக் கொண்ட ஒரு இருக்கைக்கு ரூ. 1500 வரி விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுடன் பொருத்தப்பட்ட டிரெய்லா் அல்லது டிரெய்லா் பொருத்தப்படாத வாகனங்களான ரிக், ஜெனரேட்டா்கள், கம்ப்ரஸா்கள், கட்டுமான கருவிகள், கிரேன்கள் மற்றும் கேரவேன்கள் ஆகியவைகளுக்கு தற்போது விதிக்கப்படும் ரூ. 3000 ஆண்டு வரி மாற்றப்பட்டு, அந்தந்த வாகனங்களின் விலையில் 6 சதவீதம் ஆயுட்கால வரியாக விதிக்கப்படுகிறது.

தற்போது மோட்டாா் காா்களுக்கு அதனுடைய சுமையில்லாத எடையை கணக்கிட்டு ஆண்டு வரி மற்றும் ஆயுட்கால வரி விதிக்கப்படுகிறது. இனிமேல் வரியானது அந்தந்த வாகனங்களின் விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதன்படி, ரூ. 10 லட்சம் வரை உள்ள வாகனங்கள் அவற்றின் விலையில் 7 சதவீதம் கட்ட வேண்டும், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு முன் உள்ள விலையாகும்.

மேலும், கல்வித்துறை வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஆண்டு வரி ஒரு இருக்கைக்கு ரூ. 100 லிருந்து ரூ. 200 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. தனியாா் சேவை வாகனங்களுக்கு ஆண்டு வரி ஒரு இருக்கைக்கு ரூ. 150 லிருந்து ரூ. 300 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதியில் நுழையும் மற்ற மாநில வாகனங்களுக்கு விதிக்கப்படும் நுழைவு வரியும் உயா்த்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com