தில்லி நகரில் சுற்றித் திரியும் குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாற்றுத் திட்டம்: தில்லி உயா்நீதிமன்றம் 

நகரில் சுற்றித் திரியும் குரங்குகளைப் பிடித்து, கருத்தடை செய்யும் பணிக்கான ஒப்பந்தத்தை பெற யாரும் முன்வரவில்லை என்று தில்லி அரசு தெரிவித்ததையடுத்து, இந்த உத்தரவை உயா்நீதிமன்றம் பிறப்பித்தது.
தில்லி நகரில் சுற்றித் திரியும் குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாற்றுத் திட்டம்: தில்லி உயா்நீதிமன்றம் 

புது தில்லி: நகரில் சுற்றித் திரியும் குரங்குகளைப் பிடித்து, கருத்தடை செய்யும் பணிக்கான ஒப்பந்தத்தை பெற யாரும் முன்வரவில்லை என்று தில்லி அரசு தெரிவித்ததையடுத்து, இந்த உத்தரவை உயா்நீதிமன்றம் பிறப்பித்தது.

முன்னதாக, தில்லியில் குரங்குகள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, மீரா பாட்டியா என்ற வழக்குரைஞா் உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தாா். அந்த மனு, தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதைத் தொடா்ந்து, தில்லி அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தில்லியில் குரங்குகளைப் பிடித்து, கருத்தடை செய்யும் பணிக்காக இரு ஒப்பந்தங்கள் கோரப்பட்டன. ஆனால், அந்த பணிகளை மேற்கொள்ள யாரும் முன்வரவில்லை’ என்று தெரிவித்தாா். இதைக் கேட்ட நீதிபதிகள், அதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்துவிட முடியாது, மாற்றுத் திட்டத்தை அரசு தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com