Enable Javscript for better performance
தேனியில் ரூ.18 லட்சம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் ரூ.18 லட்சம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல் கைது

    By DIN  |   Published on : 09th February 2018 10:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rupees

    தேனியில் இரண்டாவது முறையாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.18 லட்சத்துக்கும் மேற்பட்ட கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியன் தலைமையில் போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) ரோந்து சென்றனர். அப்போது, கம்பம்- கூடலூர் பிரதான சாலை பயிர்க்காரி ஓடை மேற்குப் பகுதியில் உள்ள ஒரு புளியந்தோப்பில் கார் அருகே நின்றிருந்த 6 பேரை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து போலீஸார் அந்த காரை சோதனை செய்த போது, அதில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    மேலும், அவர்களை விசாரித்த போது, கம்பம்- காமயகவுண்டன்பட்டி சாலையில் வசிக்கும் ஜாபருல்லா மகன் அஜ்மல்கான் (34), உத்தமபாளையம் நாட்டாண்மைக்காரத் தெருவைச் சேர்ந்த சுப்பையா (48), ஆர்.சி. பழைய சர்ச் தெருவைச் சேர்ந்த சூசை மகன் கண்ணன் (42), போடி வினோபாஜி காலனியைச் சேர்ந்த செல்வராஜ் (60), அவரது மகன் சசிக்குமார்(35), குயவர்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல்கானின் தந்தை ஜாபருல்லா வழக்கு ஒன்றில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், தேனி-கம்பம் சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பணம் செலுத்தும் மிஷினில் வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ஜஹாங்கீர் என்பவர் பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அதில், ரூ.42 ஆயிரத்துக்கு ஒரே வரிசை எண்கள் கொண்ட ரூபாய் நோட்டுக்கள் இருந்ததால் அதனை கள்ளநோட்டு என அந்த இயந்திரம் கட்டிகொடுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் ஜோசப் இமானுவேல் தேனி காவல் நிலையத்தில் ஜஹாங்கீர் பற்றி புகார் கொடுத்துள்ளார். 

    இதையடுத்து ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஜஹாங்கீரை போலீஸார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து போடி நாயகனூரைச் சேர்ந்த அப்பாஸ் மற்றும் கதிரேசன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் அச்சடிக்கும் பிரிண்டர்கள் மற்றும் வங்கிளில் பயன்படுத்தப்படும் ரப்பர் ஸ்டாம்கள், பணம் கட்ட ரிசர்வ் வங்கியில் பயன்படுத்தும் அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. 

    மேலும் அந்தக் கும்பல் அச்சடித்து வைத்திருந்த 18 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai