Enable Javscript for better performance
வேலூரில் பரபரப்பு: பொன்னியம்மன் கோவிலில் உள்ள 2 தேர்கள் திடீரென எரிந்து சேதம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூரில் பரபரப்பு: பொன்னியம்மன் கோவிலில் உள்ள 2 தேர்கள் திடீரென எரிந்து சேதம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fire

    வேலூர்: வேலூரில் பொன்னியம்மன் கோவிலில் இருந்த 2 தேர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன. 

    உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் உள்ள கடைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.2) இரவு தீப்பிடித்ததில் 30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்ததுடன், அங்குள்ள வீர வசந்தராயர் மண்டபமும் சேதமடைந்தது. தீ விபத்துத் தொடர்பாக கோயில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், தனிப்படை அமைத்தும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள மாரியம்மன், பொன்னியம்மன் கோவிலின் 22 அடி உயர 2 தேர்கள் நள்ளிரவில் திடீர் என்று தீப்பிடித்து எரிந்து சேதம் ஆகியுள்ளது. 

    நள்ளிரவில் ஏற்பட்ட தீயை அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இரண்டாவது வாரமாக வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் தீ விபத்து நிகழ்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai