ஜம்மு- காஷ்மீர் முதல்வரை சந்தித்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பாகிஸ்தானுடனான பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தையே ஒரே வழி என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். 
ஜம்மு- காஷ்மீர் முதல்வரை சந்தித்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பாகிஸ்தானுடனான பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தையே ஒரே வழி என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இரண்டு தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜம்மு- காஷ்மீர் முதல்வரை சந்தித்து பேசினார். 

பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது சன்ஞ்வான் பயங்கரவாத தாக்குதல் இன்று காலை 10.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. இருப்பினும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது. பொதுமக்கள் உட்பட 6 பேர் இத்தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4வது பயங்கரவாதி முகாம் பகுதியில் நுழையாமல் பயங்கரவாதிகளுக்கு ஆலோசனை மட்டும் வழங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சன்ஞ்வான் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதற்கான பலனை பாகிஸ்தான் அனுபவிக்கும். இந்தியா தக்க பதிலடி தரும். என்று அவர் தெரிவித்தார். முன்னதாக தாக்குதலுக்குள்ளனா கர்ப்பிணி பெண் நேற்று ராணுவ மருத்துவமனையில் குழந்தை பெற்றார் அவரை நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com