அருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு சீனா கடும் கண்டனம் 

பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாசல பிரதேசம் சென்றார். அங்கு இட்டாநகரில் முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டு பெயரில்
அருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு சீனா கடும் கண்டனம் 

பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாசல பிரதேசம் சென்றார். அங்கு இட்டாநகரில் முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டு பெயரில் மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்த மோடி புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

பிரதமர் நரேந்திர மோடிக்கு அருணாச்சல பிரதேசத்திற்கு வருகைக்கு சீனா தனது "எதிர்ப்பை" வெளிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளின் உறவு பாதிக்கும் வகையில் உள்ளது எனவும் சீனா கூறியுள்ளது. தென் திபெத்தின் ஒரு பகுதி அருணாச்சல பிரதேசம் என சீனா கூறி வருகிறது. 

சீன-இந்திய எல்லைப் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் தெரிவித்து உள்ளார்.

"சீன அரசாங்கம் அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கப்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. மேலும் அங்கு இந்திய தலைவர்கள் விஜயம் செய்வதை உறுதியாக எதிர்க்கிறது," என ஜெங் கூறியதாக அரசு சார்பான செய்தி நிறுவனம் சின்ஹூவா தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லை 3,488 கி.மீ ஆகும். இந்த எல்லை பிரச்சனை சம்பந்தமாக இரு தரப்பினரும் இதுவரை 20 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com