ஒடிசாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்த இளைஞர்!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்துள்ளதுடன்
ஒடிசாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்த இளைஞர்!

மயூர்பஞ்ச்: ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்துள்ளதுடன் காயமடையும் காட்டு விலங்குகளான யானைகள், புலிகள், குரங்குகள் போன்றவைகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறார்.

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உத்தாணி நுவாகான் என்கிற ஊரைச் சேர்ந்த கிருஷ்ண சந்திர கோச்சாயத் என்கிற இளைஞர் பாம்புகளைக் கண்டு அஞ்சுவதில்லை. எத்தகைய கொடிய நஞ்சுள்ள நாகமாக இருந்தாலும் வெறுங்கையால் அவற்றைப் பிடித்து விடுகிறார். சுற்று வட்டாரத்தில் எந்த வீட்டில் பாம்பு புகுந்தாலும் அதைப் பிடிக்க இவரையே அழைக்கின்றனர்.

இவர், பாம்பு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு காட்டுபவராக உள்ளார். காடுகளில் காயம்பட்டுத் துன்புறும் விலங்குகளைக் கண்டால் அவற்றுக்கும் மருந்திட்டுச் சிகிச்சை அளித்து வருகிறார். 

மான், புலி, யானை, சிறுத்தை, குரங்கு ஆகிய விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சிகிச்சை அளித்து அவற்றைக் காப்பாற்றுவதுடன் அதனை மீண்டும் காட்டில் விடுப்பது தனக்கு மனநிறைவைத் தருவதாக அவர் தெரிவிக்கிறார். 

தோல்கள் மற்றும் விலங்குகளின் பிற பாகங்களை விற்க விரும்பும் வேட்டைக்காரர்களிடமிருந்து அனைத்து வகையான விலங்குகளையும் காப்பாற்றி வனத்துறையை உதவி வருகிறார். 

விலங்குகள் இல்லையேல் காடுகள் இல்லை, காடுகள் இல்லையேல் மனிதனே இல்லை என்கிறார் கிருஷ்ணச் சந்திர கோச்சாயத்

வன பாதுகாப்பின் உதவியோடு மட்டுமல்லாமல் பல நேரங்களிலும் தனது சொந்த செலவில் மீட்கவும் சாலையோர நாய்கள் அமைப்பையும் நடத்தி வருகிறார். 

உத்தாணி நுவாகான் கிராமத்தில் குடும்பத்தாரோடு வாழ்ந்து வருகிறார் கோச்சாயத். அவருடைய மனைவி மற்றும் தாயார் அவருடைய வாழ்க்கையை நினைத்து எப்போதும் பயப்படுவதாக கூறுகிறார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com