சுடச்சுட

  

  அமித் ஷா வருகையால் தமிழகத்தில் மழை; தாமரை தானாக மலரும்: தமிழிசை பேட்டி

  By DIN  |   Published on : 10th July 2018 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamilesai

  சென்னை: அமித் ஷா வருகையால் தமிழகத்தில் தாமரை தானாக மலரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
     
  பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 2019-இல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்காக தமிழகப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமித்ஷா  நேற்று திங்கள்கிழமை சென்னை வந்தார்.

  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்க கடற்கரை அரங்கில் பாஜகவின் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 41 நாடாளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர்களுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார். 

  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவரை வழி அனுப்பி வைத்தப்பின் சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்துள்ளதாகவும், இந்த மழையால் குளங்கள் நிரம்பும் என்றும் குளங்கள் நிரம்பினால் தாமரை தானாக மலரும் என்றார். 

  தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். புள்ளி விவரங்கள் இல்லாமல் அமித் ஷா எதையும் பேச மாட்டார் என தெரிவித்தார்.

  மேலும், தமிழகத்தில் யாரெல்லாம் தாமரை மலராது எனக் கூறி கிண்டல் அடித்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் கைக்கூப்பி தாமரை மலர்ந்துவிட்டது என சொல்ல வைப்போம். 

  வார்டு வாரியாக தேர்தல் வேலை செய்ய நிர்வாகிகளை நியமித்துள்ளோம். இந்த திட்டத்திற்கு சிறந்த பலன் தேர்தலில் கிடைக்கும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai