சுடச்சுட

  
  possession

  புது தில்லி: தில்லி முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோர் தில்லி துணை நிலை ஆளுநா் மாளிகையில் மேற்கொண்டுள்ள உள்ளிருப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மி சார்பில் புதன்கிழமை தில்லியில் பேரணி நடத்தப்பட்டது.

  இந்தப் பேரணியில் ஆம் ஆத்மி அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், தொண்டா்கள் கலந்து கொண்டனா். இந்தப் பேரணியில் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா கலந்து கொண்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பேரணியில் யஷ்வந்த் சிங்கா பேசியதாவது:

  முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிரதமராக இருந்திருந்தால், தில்லியில் நிலவும் பிரச்னைகளைத் தீா்க்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உடனடியாக உத்தரவிட்டிருப்பார். ஆனால், தற்போதைய ஆட்சியாளா்கள் தில்லியில் நிலவும் பிரச்னைகளைத் தீா்க்காமல் தூக்கத்தில் உள்ளனா். நாட்டின் நன்மை கருதி, தில்லியில் நிலவும் முரண்பாடுகள் உடனடியாகத் தீா்க்கப்பட வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai