Enable Javscript for better performance
அமெரிக்காவின் 30 பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரியை விதிக்க இந்தியா முடிவு- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்காவின் 30 பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரியை விதிக்க இந்தியா முடிவு

    By DIN  |   Published on : 16th June 2018 08:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    imports_trade

    இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் உருக்குக்கு 25%, அலுமினியத்துக்கு 10% கூடுதலாக  வரி விதிப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கான வரியை உயர்த்த இந்தியா முடிவெடுத்துள்ளது.

    அதன்படி 800CC-க்கு அதிமான எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் பைக்குக்கு 50%, பாதாம், வால்நட்டுக்கு 20% ஆப்பிளுக்கு 25%, உள்பட 30 பொருட்களுக்கான வரி விதிக்கப்படவுள்ளது. அமெரிக்காவுக்கு அளித்து வந்த இச்சலுகைகளை நிறுத்திக்கொள்வதன் மூலம் இந்தியாவிற்கு 238.09 மில்லியன் டாலர் வசூலாகும் என உலக வர்த்தக நிறுவனத்திடம் இந்தியா தெரிவித்துள்ளது.

    மேலும், இந்தியாவின் உருக்கு அலுமினியத்துக்கு அமெரிக்கா விதித்த வரியை நீக்கும் வரை இந்த கூட்டு வரி நடைமுறையில் இருக்கும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai