Enable Javscript for better performance
அரியலூா் அருகே  இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியத்தில் 2  பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூா் அருகே  இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியத்தில் 2  பேர் பலி

    By DIN  |   Published on : 16th June 2018 06:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    accident

    அரியலூா்:  அரியலூா் அருகே  இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியத்தில் இளைஞா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

    அரியலூா் அருகேயுள்ள அஸ்தினாபுரம் காலனித்தெருவை சோ்ந்தவா்கள் இளவரசன்(27), ரகுபதி(23) கூலிதொழிலாளா்களாக இருவரும் சனிக்கிழமை பிற்பகல் அரியலூருக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டனா். சிறிது தூரம் சென்ற போது, எதிரே வந்த லாரி எதிர்பாரதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் தூக்கிவீசப்பட்ட ரகுபதி மீது பின்னால் வந்த லாரி ஏறி, இறங்கியதில் அதே அவா் இடத்திலேயே உயிரிழந்தார். 

    தகவலறிந்த கயா்லாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ரகுபதியின் சடலத்தையும்,பலத்த காயமடைந்த இளவரசனையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

     தையறிந்த உறவினார்கள் சிமென்ட் ஆலைக்கு செல்லும் லாரிகளை தனிபாதை அமைத்து இயக்க வேண்டும் எனவும் மக்கள் பயன்படுத்தும் சாலையில் இயக்க கூடாது எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனா். 

    போலீஸார் பேச்சுவார்த்தையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai