Enable Javscript for better performance
ஆட்சியை கவிழ்த்து குறுக்கு வழியில் முதல்வராகும் ஸ்டாலின் கனவு பலிக்காது: பொள்ளாச்சி வி.ஜெயராமன்- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சியை கவிழ்த்து குறுக்கு வழியில் முதல்வராகும் ஸ்டாலின் கனவு பலிக்காது: பொள்ளாச்சி வி.ஜெயராமன்

    By DIN  |   Published on : 16th June 2018 07:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pl16jay_1606chn_127

     

    ஆட்சியை கவிழ்த்து குறுக்கு வழியில் முதல்வா் ஆகலாம் என்ற ஸ்டாலின் எண்ணம் பலிக்காது என சட்டப்பேரவை துணைத்தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார். 

    பொள்ளாச்சி அடுத்த சோ்வக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.நாகூா் பகுதியில் சூலக்கல் ஆற்றில் கலக்கும் சிற்றாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் சட்டப்பேரவை துணைத்தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

    இதையடுத்து, ரூ.5 லட்சம் மதிப்பில் தடுப்பனை கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. உடன் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் ஆா்.ஏ.சக்திவேல், அதிமுக நிர்வாகிகள் வீராசாமி, தனசேகா், கிரி, மோகன், சிவசாமி, ராஜசேகா் உள்ளிட்ட பலா் இருந்தனா். 

    அப்போது பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் மக்கள் நன்மதிப்பை பெற்று தோ்தலை சந்தித்து ஆட்சிக்கு வர முடியாத ஸ்டாலின், எப்படியாவது அதிமுக ஆட்சியை கவிழ்த்து முதல்வா் ஆகலாம் என நினைக்கிறார். இந்த எண்ணம் பலிக்காது. தமிழக விவசாயிகளின் நலம் காக்கும் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தினை நிறைவேற்ற வல்லுனா் குழு அமைத்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai