Enable Javscript for better performance
எல்லையில் பதற்றம்: ஜம்மு-காஷ்மீர் போலீசார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு- Dinamani

சுடச்சுட

    

    எல்லையில் பதற்றம்: ஜம்மு-காஷ்மீர் போலீசார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு 

    By DIN  |   Published on : 16th June 2018 04:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kashmir

    காஷ்மீர் மாநிலம்  ஸ்ரீநகரில் பதன் சவுக் பகுதியில் 29- வது பட்டாலியன் பிரிவின் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

    காஷ்மீரில் ரமலான் புனித மாதத்தை முன்னிட்டு, ஒரு மாதத்துக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை கண்டுகொள்ளாத பாகிஸ்தான் ராணுவத்தினர், எல்லைக்கு அப்பால் இருந்து தொடர்ந்து அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ராணுவ வீரர்களும், எல்லையோர அப்பாவி மக்களும் கொல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் ஆர்னியா செக்டார் மற்றும் நவ்சேரா பகுதிகளில், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நவ்சேரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிகாஸ் குருங் (21), எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் படைக்கு, இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

    எல்லையில் பதற்றம் நிலவுவதால், அட்டாரி மற்றும் வாகாவில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் இடையே இனிப்புகள் பரிமாறி கொள்வது இந்த ஆண்டு நடக்கவில்லை. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai