Enable Javscript for better performance
கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

    By DIN  |   Published on : 16th June 2018 05:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kabini

    கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 15,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

    கேரளத்தைத் தொடர்ந்து, கர்நாடகத்திலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடுபகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதனால், கேரளத்தில் இருந்து கர்நாடகத்துக்கு பாய்ந்தோடும் கபினி ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
    மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா வட்டத்தில் கபினி ஆற்றுக்கு இடையே அமைந்துள்ள கபினி அணைக்கு வியாழக்கிழமை விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளிக்கிழமை விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதேபோல, வியாழக்கிழமை அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக திறந்துவிடப்பட்ட தண்ணீர், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. 

    இந்நிலையில் தற்போது கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் வெளியேற்றும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 2284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் 2279.50 அடி நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai