Enable Javscript for better performance
காங்கிரஸ், மஜத கூட்டணி குறித்து பாஜக-வுக்கு கவலை இல்லை: மைசூரு பாஜக எம்பி- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ், மஜத கூட்டணி குறித்து பாஜக-வுக்கு கவலை இல்லை: மைசூரு பாஜக எம்பி

    By DIN  |   Published on : 16th June 2018 07:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Pratap_Simha

     

    நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், மஜத கூட்டணி குறித்து பாஜக-வுக்கு கவலை இல்லை என மைசூரு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, சனிக்கிழமை தெரிவித்தார்.

    இதுகுறித்து மைசூரு பகுதியில் அமைந்துள்ள குடகு தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா கூறுகையில்,

    வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனது 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடும். மக்களின் மனங்களை பாஜக நிச்சயம் வெல்லும். எனவே இதில் காங்கிரஸ், மஜத கூட்டணி குறித்து பாஜக-வுக்கு கவலை இல்லை.

    மைசூரு பகுதியின் மேம்பாடு குறித்து தற்போது முழு விவரங்களும் என்னிடம் உள்ளது. எனவே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தற்போது முதலே ஆதரவு திரட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளேன் என்றார்.

    பின்னர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அங்கு அமைந்திருக்கும் மைதானத்தை பார்வையிட்டார். கடந்த முறை 55 ஆயிரம் பேர் திரண்ட நிலையில், தற்போது 70 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai