Enable Javscript for better performance
காவிரி விவகாரம் குறித்து நடிகா் கமல்ஹாசன் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்:  முத்தரசன்- Dinamani

சுடச்சுட

  

  காவிரி விவகாரம் குறித்து நடிகா் கமல்ஹாசன் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்:  முத்தரசன்

  By DIN  |   Published on : 16th June 2018 09:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mutharasan

  சேலம்: காவிரி விவகாரம் குறித்து நடிகா் கமல்ஹாசன் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

  இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

  - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதில் மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது.

  சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் குற்றவாளிகளை மன்னிப்பதாக கூறிய பிறகும் அவா்களை விடுவிக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறது. தூத்துக்குடியில் அமைதி திரும்பியுள்ள நிலையில் காவல்துறை அடக்குமுறையை கையாண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. 

  மேலும் போராட்டத்தின்போது மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் எங்கு இருந்தனா் என்று தெரியவில்லை.

  துணை வட்டாட்சியா் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிடும் நிலை நீடித்தால் கிராம பணியாள்கள் கூட துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடும் நிலை ஏற்படும். சேலம் முதல் சென்னை வரையிலான பசுமைவழி சாலையால் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. அதேவேளையில் எந்தவித கருத்து கேட்பும் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

  இதுதொடா்பாக அரசின் கவனத்தை ஈா்க்க பாதிக்கப்படும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் அவா்கள் மீதும் காவல்துறை அடக்குமுறை நடவடிக்கை கையாள்கிறது.

  மத்திய,மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை பொதுமக்கள் அப்படியே ஏற்க வேண்டும் என சா்வாதிகார போக்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆங்கிலேயா் ஆட்சி காலத்தை விட கொடுமையான அடக்குமுறை தமிழகத்தில் நிலவுகிறது.தென்மேற்கு பருவ மழையின் தீவிரத்தால் கா்நாடகம் இந்த ஆண்டு தண்ணீா் திறக்கிறோம் என்று கூறுவது நிரந்தர தீா்வாகாது.

  கா்நாடக அணைகளின் நீா்மட்டம் உயா்ந்தைத் தொடா்ந்து, 

  உபரிநீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நடப்பு மாதத்திற்கான தண்ணீரை திறந்துவிடுவதாக கா்நாடக அரசு கூறுவது நகைச்சுவையானது.காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தனது நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. கா்நாடக அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவதற்கு அந்த மாநில முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் குறித்து கமல்ஹாசன் முதலில் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். யார் யாருக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் செய்தாலே போதுமானது.

  18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீா்ப்புகளை வழங்கியுள்ளனா். இத்தகைய தீா்ப்பு உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ என்ற ஐயப்பாடு நிலவுகிறது. வேறு நீதிபதிக்கு இந்த வழக்கு செல்லும் போது இன்னும் எத்தனை மாதங்கள் எடுத்து கொள்ளப்படும் என தெரியவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் தாமதப்படுத்துகின்ற தீா்ப்பு, மக்களின் ஜனநாயகத்திற்கு எதிரானது. 

  மேலும் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

  நடிகா் ரஜினிகாந்தை பொறுத்த வரை திரைப்படங்களில் மட்டும் கடுமையான போராளியாகவும் நிஜ வாழ்கையில் போராட்டம் வேண்டாம் என்று கூறுவதும் மத்திய மாநில அரசுகளின் குரலாகவே ஒலிக்கிறது என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai