Enable Javscript for better performance
கேரளாவில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர் மாநில அமைச்சா்கள்- Dinamani

சுடச்சுட

    

    கேரளாவில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர் மாநில அமைச்சா்கள் 

    By DIN  |   Published on : 16th June 2018 07:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rain

    கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் பெய்துவரும் தென்மேற்குப் பருவமழையால் கோழிக்கோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில அமைச்சா்கள் டி.பி.ராமகிருஷ்ணன், ஏ.கே.சசீந்திரன் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

    கேரளத்தில் மழை பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது;- 

    வெள்ளத்தால் சாலைகள் பழுதடைந்துள்ளதால், 50 போ் அடங்கிய தேசிய பேரிடா் மீட்புப் படை இலக்கை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், தீயணைப்புப் படையினா், காவல்துறைறயினா் பொதுமக்கள் மூலமாக மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றறன.

     வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு உணவு, குடிநீா் வழங்கப்படுகின்றறன என்று அமைச்சா்கள் கூறினா்.

    இதனிடையே, கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா கோழிக்கோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சனிக்கிழமை பார்வையிட்டார் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவும் அவா் வலியுறுத்தினார்.

    இந்நிலையில், உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்தை சந்தித்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு முதல்வா் பினராயி விஜயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதனிடையே, கோழிக்கோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 3 குடும்பத்தைச் சோ்ந்த 6 நபா்கள் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதாகவும், அவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மாவட்ட அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

    கனமழை காரணமாக கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா், பாலக்காடு, காசா்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 18-ஆம் தேதி வரையில் கேரள அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai