Enable Javscript for better performance
நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க தில்லி சென்றார் முதல்வர் பழனிசாமி- Dinamani

சுடச்சுட

    

    நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க தில்லி சென்றார் முதல்வர் பழனிசாமி

    By DIN  |   Published on : 16th June 2018 10:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    palanisamy

    சென்னை: நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.

    நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து  இன்று தில்லி புறப்பட்டு சென்றார். தில்லியில் உள்ள தமிழ்நாட்டு இல்லத்தில் இன்று இரவு தங்கும் அவர் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 

    இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai