Enable Javscript for better performance
மாயமான இந்தோனேஷிய பெண்ணின் சடலம் 23 அடி மலைப்பாம்பு வயிற்றில் கண்டுபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மாயமான இந்தோனேஷிய பெண்ணின் சடலம் 23 அடி மலைப்பாம்பு வயிற்றில் கண்டுபிடிப்பு

    By DIN  |   Published on : 16th June 2018 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    indonesiya

    மாயமான இந்தோனேஷிய பெண்ணின் சடலம் 23 அடி மலைப்பாம்பு வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தோனேஷியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (வயது 54). கடந்த வியாழக்கிழமை இரவு, காய்கறிகள் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற வா திபா அதற்கு பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. 

    இதனால் அதிர்ச்சியடைந்த வா தீபாவின் உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை காண இயலவில்லை. இறுதியாக தோட்டத்துக்குச் சென்று அவரைத் தேடியபோது, அங்கு 23 அடி கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்திருந்தது. மலைப்பாம்பு கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் வா திபாவின் செருப்பு கிடந்து உள்ளது. 

    இதனையடுத்து சந்தேம் அடைந்த கிராம மக்கள், மலைப்பாம்பைக் கொன்று, அதன் வயிற்றுப்பகுதியைக் கத்தியால் கிழித்தனர். அப்போது மலைப்பாம்பின் வயிற்றுக்குள் வா திபா சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

    அவருடைய தலையை முதலில் விழுங்கியுள்ள பாம்பு பின்னர் உடல் பகுதியை உள்ளே இழுத்து உள்ளது. திபாவின் தோட்டம் செங்குத்தான பாறைகள், குகைகள் என கரடு முரடாண பகுதியில் உள்ளது. அங்கு பாம்புகள் நடமாட்டம் என்பது சர்வசாதாரணமானது என உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai