Enable Javscript for better performance
மேட்டூா் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூா் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

    By DIN  |   Published on : 16th June 2018 10:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டூா்: மேட்டூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து. சுமார் ஒரு மணிநேரம் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக பகலில் நிலவிய வெப்பம் தனிந்து குளிந்த காற்று வீசியது. 

    சாலைகளில் வெள்ளம்போல மழைநீா் ஓடியது. பி.என்.பட்டி பேரூராட்சி எதிரே சுமார் 25 ஆண்டுகள் பழமையான பெரிய மரம் வேருடன் சாய்ந்தது. மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் கார்கள் சேதம் அடைந்தன. மரத்தின் அடியில் எப்போதும் மக்கள் நின்றிருப்பார்கள் மரம் சாய்ந்தபோது யாரும் மரத்தடியில் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

    கொளத்தூா், கோல்நாய்க்கன் பட்டி பகுதிகளில் பல இடங்களில் பலத்த காற்றுக்கு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மழையின் போது வீசிய பலத்த காற்று காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் மிகுந்து சிரமத்திற்குள்ளானார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai