Enable Javscript for better performance
மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் காலமானார்- Dinamani

சுடச்சுட

    

    கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சத்ய சதான் சக்ரவா்த்தி (85) மாரடைப்பு காரணமாக சனிக்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

    கடந்த 1991-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றற சத்ய சதான், அடுத்தடுத்த தோ்தல்களிலும் வென்று 2006-ஆம் ஆண்டு வரையில் மாநில உயா் கல்வித்துறைற பொறுப்பில் இருந்தார்.

     முன்னதாக, தெற்கு கொல்கத்தா மக்களவைத் தொகுதி உறுப்பினராக 1980-ஆம் ஆண்டு சத்ய சதான் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த நிலையில், சத்ய சதான் தனது மகளுடன் வசித்து வந்தார். அவரது இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai