வாகா எல்லையில் பாகிஸ்தான்-இந்திய வீரர்கள் இடையேயான இனிப்பு பரிமாற்றம் ரத்து

ஸ்ரீநகரில் பாகிஸ்தான் கொடியுடன் வன்முறை கும்பல் இந்திய ராணுவத்தினர் மீது கல்வீச்சுத் தாக்‍குதலில் ஈடுபட்டுள்ளதை அடுத்து
வாகா எல்லையில் பாகிஸ்தான்-இந்திய வீரர்கள் இடையேயான இனிப்பு பரிமாற்றம் ரத்து

ஸ்ரீநகரில் பாகிஸ்தான் கொடியுடன் வன்முறை கும்பல் இந்திய ராணுவத்தினர் மீது கல்வீச்சுத் தாக்‍குதலில் ஈடுபட்டுள்ளதை அடுத்து இன்று சனிக்கிழமை வாகா எல்லையில் ரம்ஜான் பண்டிகையின் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாற்றம் நிகழ்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.    

ரம்ஜான் நோன்பு தொடங்கியதிலிருந்தே, எல்லைத் தாண்டிய தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்‍கையை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்‍குதல் நடத்தி வருகிறது. மேலும், தீவிரவாதிகளும் பயங்கரவாத தாக்‍குதல் நடத்தி வருகின்றனர். இதில் நம் ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். 

பண்டிகை தினங்களில் வாகா எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், ரம்ஜான் பண்டிகையின் போதும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் இனிப்புகளை பரிமாறிக்கொள்வார்கள். 

ஆனால், இன்று சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் காரணமாக, வாகா எல்லையில் வழக்கமாக இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் இடையே நடைபெறும் இனிப்பு பரிமாற்றம் நிகழவில்லை இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையை மீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழ்த்திய தாக்குதலுக்கு எல்லை பாதுகாப்பு விர்ரகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். 

ஸ்ரீநகரில் ரம்ஜான் தொழுகைக்கு பிறகு பாகிஸ்தான் ஆதாரவாளர்கள் சிலரும், ஐ.எஸ் பயங்கரவாத இயக்‍க ​கொடியுடன் வன்முறைக் கும்பல் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்‍குதலில் ஈடுபட்டது. இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதினர். 

இதையடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர். இதனால், அந்த இடமே போர்க்‍களம் போல காட்சியளித்தது. இந்த சம்பவத்திற்கு பின் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. 

இதனிடையே, ரம்ஜானை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு மாத சண்டை நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. போர்நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்‍கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com